ஓமன் மற்றும் இலங்கைக்கு இடையில் விவசாயத் துறையில் ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கான உத்தேச உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தாதுள்ளார்.
இதன்படி, விவசாய அமைச்சர் சமர்ப்பித்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சர் கலாநிதி பந்துல குவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.