கடந்த ஜூன் மாதம் முதலாம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களை தாக்கி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் ஹலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்த சந்தேக நபர் இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் சீருடைகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சீருடையின் பாகங்களை அணிந்திருந்ததாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.