கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் 2035 ஆம் ஆண்டிற்குள் அனைத்து எரிபொருளில் இயங்கும் கார்களின் விற்பனையை தடை செய்ய முடிவு செய்துள்ளார் மற்றும் 2045 க்குள் பேருந்துகள் மற்றும் கனரக டிரக்குகளுக்கு தடையை நீட்டிக்க முடிவு செய்துள்ளார்.
இது தொடர்பான உத்தரவு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியிடப்படும் என அவர் வெளிநாட்டு ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எரிபொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கு முற்றுப்புள்ளி வைப்பதும், எரிபொருட்களின் விரைவான அழிவு காரணமாக எதிர்காலத்தில் எதிர்கொள்ளும் ஆற்றல் நெருக்கடிக்கு தீர்வு காண்பதும் இதன் நோக்கமாகும்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட கலிபோர்னியா, புதைபடிவ எரிபொருட்களைப் பயன்படுத்தாத வாகனத் தொழிலை ஊக்குவிக்க இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆளுநர் கவின் நியூசோம்தெரிவித்துள்ளார்.
Greetings! Very helpful advice within this post! Its the little changes that make the greatest changes. Thanks a lot for sharing!