கடந்த 19ஆம் திகதி முதல் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வர்த்தமானி அறிவிப்பை நுகர்வோர் விவகார அதிகாரசபை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், பழுப்பு அல்லது சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாக இருக்கின்றது.
மேலும்,முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை மீள்பரிசீலனை செய்யுமாறு அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து தரப்பினரும் ஏற்றால்போல் முட்டைக்கான விலையை பரிசீலிக்கவேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.