
இந்த வருடத்தில் பல்கலைக்கழகங்களுக்கு இணையவழி விண்ணப்பம் அனுப்பப்பட வேண்டுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இன்று (30) தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இதற்கு தேசிய அடையாள அட்டை அவசியம் எனவும், விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் போது ஆணைக்குழு வழங்கிய வழிகாட்டுதல்களை கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.