
2022 ஆம் ஆண்டின் முதல் தவணை செப்டம்பர் 7 ஆம் திகதியுடன் முடிவடையும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அந்த அறிவிப்பின்படி, 2022.09.02 க்குப் பிறகு தேசிய பாடசாலைகளில் நடுத்தர தரங்களுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்களை கல்வி அமைச்சு ஏற்றுக்கொள்ளாது எனவும் தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேல்முறையீடுகள்/விண்ணப்பங்கள் தொடர்பான விடயங்கள் பாடசாலைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் விண்ணப்பதாரர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப பரிசீலிக்கப்பட்டு உரிய முடிவுகள் எதிர்வரும் காலங்களில் வழங்கப்படும் தெரிவித்துள்ளது.