
குளிர்காலத்தில் உலக சந்தையில் எரிவாயுவின் தேவை அதிகரித்தாலும், எதிர்காலத்தில் இந்த நாட்டில் எரிவாயு விலையை நிலையான மட்டத்தில் பேண முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். நேற்றிரவு ஒளிபரப்பான வானொலி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டுடன் மாற்று வழிகளை நாடிய மக்கள் மீண்டும் எரிவாயுவை பயன்படுத்த பழகி வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ், கடந்த காலத்தில் ஏற்பட்ட எரிவாயு தட்டுப்பாட்டுக்கான காரணங்களையும் நிகழ்ச்சியில் விளக்கினார் விளக்கினார்.