இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்காக செப்டம்பர் 19ஆம் திகதியை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன்படி எதிர்வரும் செப்டெம்பர் 19ஆம் திகதி வரை அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு ஜனாதிபதி மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.