
மேலும் 12 அமைச்சரவை அமைச்சர்கள் அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
பதவிப் பிரமாணம் திங்கட்கிழமை (12) அல்லது செவ்வாய்கிழமை (13) நடைபெறும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பதவிப்பிரமாணம் செய்யவுள்ள அமைச்சரவை அமைச்சர்களில் பத்து பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும். ஏனைய கட்சிகளினை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜீவன் தொண்டமான் மற்றும் ஏ.எம்.எல். அதாவுல்லாஹ் ஆகியோர் அமைச்சரவை அமைச்சர்களாக சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
தற்போது பதினெட்டு கேபினட் அமைச்சர்கள் பதவியேற்று இருப்பதோடு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொள்வதன் மூலம் அமைச்சரவை முப்பதாக மாறுவதோடு. முப்பத்தேழு இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை அமைச்சர்களில் சிலரது செயற்பாடுகளை மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதிகவனம் செலுத்தியுள்ளார்.