
அம்பாறை பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் வலம்புரி விற்பனைக்கு தயாராக இருந்த நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அம்பாறை முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வலம்புரியை ஒரு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்தமை தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் உரகஸ்மன்ஹந்திய பிரதேசத்தை சேர்ந்தவர். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, அவர் பணியாற்றிய பப்புவா நியூகினியாவில் உள்ள பழங்கால பொருட்கள் விற்பனை செய்யும் கடையொன்றில் இருந்து வலம்புரி திருடப்பட்டு இந்த நாட்டுக்கு கொண்டு வரப்பட்டமை தெரியவந்துள்ளது.