
வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளதாக கூறப்படும் பாணந்துறை சாலிது என்ற பாரிய போதைப்பொருள் கடத்தல்காரருக்கு சொந்தமான போதைப்பொருள் பொதி செய்யும் நிலையமாக இயங்கி வந்த வீடொன்றை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
முப்பது இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள், ஒரு இலட்சத்து ஐம்பத்தாறாயிரம் ரொக்கம், பொதியிடல் காகிதம் மற்றும் இலத்திரனியல் தராசுகளுடன் கணவன் மனைவி தம்பதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அலுபோமுல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், 5 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பாணந்துறை கிரிபெரிய பிரதேசத்தில் வசிக்கும் 36 மற்றும் 28 வயதுடைய தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் விசேட பணியக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அலுபோமுல்ல பொலிஸார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
சந்தேக நபர்களை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தி விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் தெரிவித்தனர்.