
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்களை பரிசீலிப்பதற்கான திகதியை உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.
அதன்படி, அக்டோபர் 18-ம் தேதி கூட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இது தொடர்பான மனுக்களை பரிசீலித்ததன் பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.