
அமெரிக்க நடிகர் ரியான் கிரந்தம் தனது தாயை கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நடிகர் ரியான் கிரந்தம் 2020 இல் தனது தாயார் பார்பரா வெயிட்டைக் கொலை செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா உச்ச நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைக் கொல்லவும் இந்த 24 வயது இளைஞன் திட்டமிட்டிருந்ததாக வழக்கறிஞர்கள் கூறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வான்கூவருக்கு வடக்கே உள்ள அவர்களது வீட்டில் பியானோ வாசிக்கும் போது தாய் தலையின் பின்பகுதியில் சுடப்பட்டதாக கிரந்தம் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது, அவர் கவலை மற்றும் மனச்சோர்வினால் போராடி வருவதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்
அவர் தனது தாயைக் கொல்வதற்கு சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொள்ளவும் மற்றவர்களுக்குத் தீங்கு செய்யவும் முயன்றதாக அவரது வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.