தேவை குறைவினால் வாகனங்களின் விலை குறைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், 30 இலட்சம் ரூபாவிற்கும் குறைவான வாகனங்களின் விலைகள் குறையவில்லை என வாகன இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரெஞ்சிகே தெரிவித்துள்ளார்.
வாகனங்களின் விலையில் அசாதாரண அதிகரிப்பு மற்றும் அவற்றின் விலைகள் எவ்வாறு குறைந்துள்ளன என்பது குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.