இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இதன்படி, இலங்கை ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் 40 ரூபாவாகவும், ஒக்டேன் 95 யூரோ 4 பெற்றோல் லீற்றரின் விலை ரூ. 30 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.
எனினும் ஏனைய எரிபொருட்களின் விலைகள் திருத்தப்படவில்லை.