சட்ட மேலவைக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இந்தக் குழுவில் 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குழுவில் மொஹான் பிரியதர்ஷன டி சில்வா, சிசிர ஜயக்கொடி, பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், டொக்டர் ராஜித சேனாரத்ன, தயாசிறி ஜயசேகர, நாலக கொடஹேவா, பைசல் காசிம், அஜித் மான்னப்பெரும ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். உறுப்பினர்களான ஜயந்த சமரவீர, கோவிந்தன் கருணாகரம், இம்ரான் மஹரூப், கோகிலா குணவர்தன, பிரேம்நாத் சி டொலவத்த, மதுர விதானகே மற்றும் ஜயந்த வீரசிங்க ஆகியோரும் சட்டவாக்கக் குழுவிற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.