குறுகிய, நடுத்தர மற்றும் நீண்ட கால கொள்கைகளை வகுப்பதில் முன்னுரிமைகளை அடையாளம் காணும் தேசிய சட்டமன்ற உப குழுவின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் நாமல் ராஜபக்சவின் பெயரை முன்மொழிந்துள்ளதுடன் அதனை நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை, பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காண தேசிய சபையின் கீழ் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களின் பொருளாதார ஸ்திரப்படுத்தல் உப குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டுள்ளார்.