பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாளிகையில் 2023 ஆம் ஆண்டு மே 6 ஆம் திகதி சனிக்கிழமை அவரது முடிசூட்டு விழா நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளது.
சார்லஸ் ஏற்கனவே பிரிட்டனின் மன்னராக அறிவிக்கப்பட்டிருந்தாலும், பாரம்பரிய முடிசூட்டு விழா பிரிட்டிஷ் அரச குடும்பத்திற்கு மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.
அதன்படி, 70 ஆண்டுகளுக்குப் பிறகுதான் முடிசூட்டு விழாவுக்கு பிரிட்டன் அரச குடும்பம் தயாராகி வருகின்றது. 1902ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக பிரித்தானிய அரச குடும்பத்தின் முடிசூட்டு விழா சனிக்கிழமை நடைபெறும் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.