
பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காண தேசிய சபை உப குழுவிற்கு டிஜிட்டல் தளம் ஒன்று அமைக்கப்படும் என குழுவின் தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
நிபுணர்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக சம்பந்தப்பட்ட உபகுழு பாராளுமன்றத்தில் கூடிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்
அங்கு, நாட்டின் தற்போதைய கடன் நிலை மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை கையாள்வதில் சாத்தியமான கொள்கை நிலைகள் குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொதுக் கடன் திணைக்களத்தின் . எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் தற்போதுள்ள நிலைமையில் சற்று ஆறுதலான மாற்றம் ஏற்படும் என கலாநிதி எம்.இசட்.எம்,அசிம் குறிப்பிட்டுள்ளார்.
டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதியை பேணுதல், வரி அதிகரிப்பு, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தல் போன்றவற்றால் ஏற்படும் சமூக அழுத்தங்கள் குறித்து குழுவின் கவனம் செலுத்தப்பட்டது.
இச்சூழலுடன் ஒப்பிடும் போது, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை வீழ்ச்சி, அதிக வேலையின்மை, வறுமை அதிகரிப்பு போன்றவற்றால் ஏற்படும் சமூகப் பிரச்சனைகள் குறித்தும் குழு கவனம் செலுத்தியுள்ளது.
இங்கு, இலங்கையில் உள்ள வீடுகளின் கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு, தலைவர் பாடலி சம்பிக்க ரணவக்க, நிதியமைச்சுக்கும் புள்ளிவிபரத் திணைக்களத்திற்கும் அறிவித்தார் விடுத்துள்ளார்.
இந்த கணக்கெடுப்பு மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருப்பதால், சமூக சீர்கேட்டைப் புரிந்துகொண்டு, கணக்கெடுப்பு நடத்தி எதிர்காலக் கொள்கைகளைத் தயாரிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் தற்போது நடத்தி வரும் கலந்துரையாடல்களின் காரணமாக கடனை நிலைப்படுத்துதல் மற்றும் அழுத்தத்திற்கு உள்ளான பல்வேறு பகுதிகள் தொடர்பான முன்மொழிவுகளை உள்ளடக்கிய விரிவான அறிக்கையை டிசம்பரில் சமர்ப்பிக்கவும் குழு திட்டமிட்டுள்ளது.