சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று (14) Lady Ridgeway சிறுவர் வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன், 2 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகளை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சீனாவினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட 9 மாடி பிரதான கட்டிடம் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேனர் என்பன பரிசோதிக்கப்பட்டு புதிய குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இதற்கு மேலதிகமாக கொழும்பு வடக்கு மற்றும் தெற்கு போதனா வைத்தியசாலைகளுக்கு மேலும் 3.2 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் இன்று அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.