பிரித்தானிய கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ரிஷி சுனக் இன்று (25) பக்கிங்ஹாம் அரண்மனைக்கு மன்னன் சார்லஸை சந்திப்பதற்காக சென்றுள்ளார்.
சுனக்கை ஆட்சி அமைக்க மன்னர் சார்லஸ் அழைப்பு விடுத்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
அதன்படி சுனக் பிரித்தானிய பிரதமராக அங்கீகரிக்கப்படுவார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் 57வது பிரதமர் மற்றும் ஆசிய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் இவர் ஆவார்.