மேற்கூரையில் நிறுவப்பட்டுள்ள சூரிய சக்தி அமைப்புகளுக்கான தற்போதைய கட்டணத்தை திருத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
சூரிய சக்தி அமைப்புகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு அலகு மின்சாரத்திற்கு, முதல் 07 ஆண்டுகளுக்கு 22 ரூபாவும், அடுத்த 13 ஆண்டுகளுக்கு ஒரு யூனிட்டுக்கு 15 ரூபா 50 காசுகளும் வசூலிக்கப்பட்டது.
புதிய திருத்தத்தின்படி, 500 கிலோவாட்டிற்கு குறைவான முறையில் ஒரு யூனிட்டுக்கு 37 ரூபாயும், 500 கிலோவாட்டுக்கு மேல் உள்ள ஒரு யூனிட்டிற்கு 34 ரூபா 50 சதமும் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர விடுத்துள்ள ட்வீட்டில், சூத்திரத்தின் அடிப்படையில் வருடாந்தம் உரிய கட்டணங்கள் மாற்றியமைக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.