
தென் கொரியாவில் இடம்பெற்ற ஹாலோவீன் நிகழ்வில் சனநெரிசலில் சிக்கி உயிரிழந்த இலங்கையர் கல்விக்காக வெளிநாடு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
தென் கொரியாவின் தலைநகரான இட்டாவோனில் இடம்பெற்ற ஹாலோவீன் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களில் இலங்கையர் ஒருவரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வெளிநாட்டு உறவுகள் திணைக்களம் தென்கொரியாவில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரணை நடத்தியது.
தூதரகத்தில் இருந்து தற்போது கிடைத்த தகவலின்படி, உயிரிழந்தவர் அகதி விசாவில் நாட்டில் தங்கியிருந்தவர் ஆவர்.
உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் மேற்குறிப்பிட்ட நபரைத் தவிர வேறு இலங்கையர் எவரும் இல்லை எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான அறிக்கை தென்கொரியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினால் எதிர்வரும் காலங்களில் வெளியிடப்பட உள்ளது.