
குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மற்றுமொரு நோயாளி இந்நாட்டிலிருந்து பதிவாகியுள்ளார்.
இதன்படி இலங்கையில் பதிவாகியுள்ள குரங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இரண்டாவது நபர் இவர் ஆவார்.
இவ்வாறு பதிவாகியுள்ள நோயாளி டுபாயில் இருந்து இலங்கை வந்த 42 வயதுடையவர் என சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறித்த நோயாளி அங்கொட தொற்று நோயியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.