
இந்த பருவத்தில் நெல் சாகுபடிக்கு தேவையான யூரியா உரம் அனைத்து விவசாய சேவை மையங்கள் மூலம் இன்று முதல் வெளியிடவுள்ளது.
நெற்செய்கைக்குத் தேவையான யூரியா உரம் ஏற்கனவே அனைத்து விவசாய சேவை நிலையங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
மேலும்,யூரியா உரம் முறையான விநியோகம் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கும் அமைச்சர் பதிலளித்தார்.
இம்மாதத்தில் எம்ஓபி உரம் மற்றும் சேதன உரங்களைப் பயன்படுத்தும் விவசாயிகளுக்கு 20,000 ரூபா மானியம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.