
இந்த நாட்டில் தொழில் தொடங்குவதற்கான இலகுவான சுட்டெண் மதிப்பை அதிகரிப்பது தொடர்பில் எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள் மற்றும் சிரமங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாராளுமன்ற விசேட குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
காலை பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட வேளையில் சபாநாயகர் மஹிந்தயபா அபேவர்தன இதனை அறிவித்தார்.
இதேவேளை, தாம் சமகி ஜனபலவேகவில் இணைந்து கொண்டதாக வெளியான செய்திகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்னவும் இன்று பாராளுமன்றத்தில் கருத்து வெளியிட்டார்.