அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை மீண்டும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ஒரு கிலோ சிவப்பு அரிசியின் விலையும் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 205 ரூபாவாகும்.
ஒரு கிலோ சிவப்பு பருப்பின் விலையும் 9 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 389 ரூபாவாகும்.
425 கிராம் உள்ளூர் டின் மீன் ஒன்றின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 540 ரூபாவாகக் காட்டப்பட்டுள்ளது.