
ருமேனியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி சட்டவிரோதமான முறையில் நேர்முகத் தேர்வு நடத்திய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்கள் முகநூல் ஊடாக விளம்பரங்களை வெளியிட்டு இந்த நேர்முகத்தேர்வுகளுக்கு ஆட்களை அழைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.
மேலும்,கைது செய்யப்பட்டவர்களில் இத்தாலிய பிரஜை ஒருவரும் அடங்குவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்தார்.