
தேர்தலை நடத்துவதற்காக பாராளுமன்றத்தை கலைக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, நாடு தற்போது பல பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், தேர்தலொன்றுக்கு முன்னுரிமை அளிப்பதில்லை எனவும், பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்ட பின்னரே அதனை நடத்த முடியும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“நாட்டில் உள்ள பலர் இப்போது தேர்தல் மற்றும் அரசியலால் சலிப்படைந்துள்ளனர். சாதாரண மனித சக்தி,வேகம் மற்றும் ஆளும் கட்சி உட்பட எல்லா அரசியல் கட்சிகளும் இன்னும் அதே முகத்தைக் கொண்டுள்ளன. ஆனால் நாட்டின் நம்பிக்கை இனி புதிய இளம் முகங்களில் உள்ளது,” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மேலும், மக்கள் எதிர்பார்த்தது போன்று புதிய நபர்களை அறிமுகப்படுத்தி தேர்தலை நடத்தி அதன் பின்னரே எவருக்கும் அதிகாரம் கிடைக்க முடியும் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
அத்தோடு, விருப்பு வாக்கு முறையின் கீழ் ஊழல் மோசடிகள் வழமையாக காணப்படுவதால் தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் நாட்டில் போராட்டம் நடத்தப்பட்டால் அதனை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் சட்டம் பயன்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.