
இலங்கைதினை சேர்ந்த நபர் வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் போது பதிவாளர் நாயகத்திடம் அனுமதி பெற வேண்டும் என பதிவாளர் நாயகம் பி.எஸ்.பி. அபேவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும், அத்தகைய அனுமதியைப் பெறுவதற்கு இரண்டு விடையங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த நபருக்கு சட்டப்பூர்வ அதிகாரத்துடன் வழங்கப்பட்ட வாரண்ட் அல்லது தொற்று நோய் இல்லை என்கின்ற சான்றிதல்களினை வழங்கவேண்டும் அவ்வாறு வழங்கப்பட்ட ஆவணங்களை உறுதிப்படுத்தப் பட்டத்திற்கு பிறகு அதிகா பூர்வாணமாக அவர்களுக்கான அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 மாதங்களில் 1703 இலங்கையர்கள் பதிவாளர் நாயகத்தின் சம்மதத்துடன் வெளிநாட்டவர்களை திருமணம் செய்துள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பிரஜைகளை திருமணம் செய்துள்ளதாகவும் பதிவளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.