
வெலிகம கடற்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தொன்றை சுற்றிவளைத்த வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் எட்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
மேலும், போதைப்பொருள் மற்றும் மாத்திரைகளை பயன்படுத்தி விருந்து நடத்தப்பட்டதாக கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த விருந்தானது பேஸ்புக் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெலிகம, ரணல, திஸ்ஸமஹாராமய, கனங்கே, தெலிஜ்ஜவில, சியாவலல மற்றும் பெலியத்த ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
மேலும், சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.