
சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலையை முறையாக நடத்துவது தொடர்பான கலந்துரையாடல் இன்று (30) காலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதன்போது வைத்தியசாலையின் திட்டம், வசதிகள் மற்றும் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதுடன், மனித வளப் பற்றாக்குறை மற்றும் நிதி நெருக்கடிகள் தொடர்பில் அதிகாரிகள் ஜனாதிபதியிடம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், கிடைக்கப்பெறும் வளங்களை திறம்பட பயன்படுத்தி அதிகபட்ச நன்மைகளை பெற வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எழுந்துள்ள பிரச்சினைகளை உடனடியாக தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை தொடர்வதன் முக்கியத்துவத்தையும் விளக்கியுள்ளார்.