
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, நாட்டில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 43 வீதமும் பத்தில் 4 பேர் போஷாக்கு தொடர்பான சில பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, அமைச்சகத்தின் குடும்ப நலப் பணியகம் நடத்திய ஆய்வின் மேலும் அறிக்கை, குழந்தைகளின் வளர்ச்சி குன்றியது, எடை குறைவு, வளர்ச்சி குன்றிய தன்மை அல்லது அதிக எடை ஆகியவை அடங்கும்.
மேலும், அதிகூடிய வீதமாக பதிவாகும் அம்பாறை மாவட்டத்தில் 59 வீதமாக காணப்படுகின்றது.
அத்தோடு, 10 மாவட்டங்களில் 45 சதவீதத்திற்கும் அதிகமான குழந்தைகள் சத்துணவு தொடர்பான பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
6 மாவட்டங்களில், 51 சதவீதத்திற்கும் அதிகமாக பதிவாகியுள்ளதுடன் குடும்ப சுகாதார பணியகத்தின் ஆய்வு அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதம் மற்றும் பத்தில் 9 பேர் ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகளால் பாதிக்கப்படுகின்றனர்.
இதில் அம்பாறை மாவட்டமே அதிகளவில் பாதிக்கப்பட்டிருக்கின்றதுடான் அதன் சதவீதமாக 59.4 சதவீதமாக காணப்படுகின்றது.
மேலும் 5 மாவட்டங்களில் 51 சதவீதத்தை தாண்டியுள்ளது.
குருநாகல் மாவட்டத்தில் ஊட்டசத்து குறைபாட்டினால் அதிகளவான சிறுவர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் அதனடிப்படையில் 47,982 தாகவுள்ளது .
மேலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு 15 சதவீதத்தை தாண்டியுள்ளதாக ஒட்டுமொத்த அறிக்கையம் வெளிப்படுத்தியுள்ளது.
இது 2021 இல் 12.2 சதவீதம் என்ற அளவில் இருந்ததுள்ளது விடையமாகும்.
இருந்தபோதிலும், நாட்டில் விவசாயம் 8.2 சதவீதத்தில் இருந்து 10.1 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எவ்வாறாயினும், நாட்டின் ஒட்டுமொத்த போசாக்கு குறைபாடு இதை விட அதிகமாக இருக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன இன்று பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே தெரிவித்தார்.