
தற்போது குத்தகைக்கு விடப்பட்டுள்ள விமானங்களின் குத்தகை காலம் விரைவில் முடிவடையவுள்ள காரணத்தினால் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு பல விமானங்களை குத்தகைக்கு வழங்க தீர்மானித்துள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, வரவு செலவுத் திட்ட குழு வாய்ப்பு விவாதத்தின் 11 ஆவது நாளான நேற்று விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் வரவு செலவுத் திட்ட தலைப்புகள் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. ஸ்ரீலங்கன் விமான சேவையானது மறுசீரமைப்பு செய்யப்படும் வரை தொடர்ந்து இயங்க வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளார்.