
பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு சிறையில் உள்ள திலினி பிரியமாலி, சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று (06) முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், முறைப்பாடு தொடர்பில் கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி மஞ்சு ஸ்ரீ சந்திரசேன, இந்த அசாதாரண பரீட்சைகளால் திலினி பிரியமாலியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அத்தோடு, நேற்று (05) இரவு சந்தேகநபர் திலினி பிரியமாலி அடைக்கப்பட்டுள்ள அறைக்கு வந்த சிறைச்சாலை அதிகாரிகள், சந்தேக நபர் எதையோ மறைத்து வைத்திருப்பதாக அவரது ஆடைகளை கழட்டுமாறு உத்தரவிட்டதுடன், விளக்கையும் ஒளிரச் செய்துள்ளனர் ஐயன் காரணமாக அவர் மேலும், அசௌகரியமடைந்துள்ளார் எனவும் குறித்த சட்டத்தரணிகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர்.