
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் அறிவிப்புகளை டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிட தேர்தல் ஆணையகம் முடிவு செய்துள்ளது.
மேலும், உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்புச் சட்டத்தின் பிரகாரம் மார்ச் 20 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி 5 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
எனவே, எதிர்வரும் தேர்தலை நடத்துவது தொடர்பில் பல சுற்று கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் நாட்களிலும் இது தொடர்பான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்தார்.