
எதிர்காலத்தில் இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பால் பவுடர் உற்பத்தி சுமார் 8 சதவீதம் குறைந்துள்ளதே இதற்குக் காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில், சீனாவினால் கொள்வனவு செய்யப்படும் பால் மாவின் அளவு குறைவடைந்தமையினால் இலங்கையால் பால் மாவை கொள்வனவு செய்ய முடிந்துள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, கடந்த முறை, இறக்குமதி செய்யப்பட்ட 400 கிராம் பால் மா பாக்கெட்டின் விலையை, 1,240 ரூபாயாக உயர்த்த, சங்கம் செயல்பட்டதற்கான காரணிகளாக. பயன்படுத்தப்படும் பொதியிடல் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் சமூக பாதுகாப்பு வரி காரணமாக பால் மாவின் விலை அதிகரிக்கப்பட்டதாக சங்கத்தின் உறுப்பினர் கலாநிதி லக்ஷ்மன் வீரசூரிய மேலும் தெரிவித்தார்.