
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகின்றது. மேலும்,தலைநகர் டாக்காவில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டு வருவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் அதன் விளைவாக மக்கள் எதிர்கொள்ளும் பணவீக்கத்திற்கு எதிராக பிரதான எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி இந்தப் போராட்டம் நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்டுப்பாடற்ற பொருட்களின் விலையேற்றம் காரணமாக தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதன்படி, பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகுமாறு போராட்டக்காரர்கள் கோரி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.