
இத்தாலிய மற்றும் இலங்கை கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக, இலங்கைக்கான இத்தாலிய தூதுவர் ரீட்டா கியுலியானா மன்னெல்லா மற்றும் EXPO Rome 2030 வேட்பாளர் உறுப்பினர் கெய்டானோ ஆகியோரின் பங்களிப்புடன், பொறுப்பான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் ஊழியர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது. .
மேலும், புத்த சாசன மத மற்றும் கலாசார அமைச்சின், மேலதிக செயலாளர் அனோஜா பி. குருகே, மேலதிக செயலாளர் (ஊக்குவிப்பு) திலக் ஹெட்டியாராச்சி, உதவிச் செயலாளர் (நிர்வாகம்) பாக்யா சி. கட்டுதெனிய, தேசிய மரபுரிமை பிரிவின் மேலதிக செயலாளர் சுஜீவ பள்ளியகுருகே, தொல்பொருள் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் பிரசன்ன மற்றும் ஏனைய ஊழியர்களின் தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.