
பொரளை கேம்பல் மைதானத்தில் இடம்பெற்ற வருடாந்த மாநாட்டில் சமகி ஜன பலவேகவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச மீண்டும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி அடுத்த வருடம் வரை சஜித் பிரேமதாச அதன் தலைவராக இருப்பார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கட்சியின் செயலாளராக ரஞ்சித் மத்துமபண்டாரவையும், கட்சியின் பொருளாளராக கலாநிதி ஹர்ஷ டி சில்வாவையும் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, சமகி ஜன பலவேகவின் தேசிய அமைப்பாளராக திஸ்ஸ அத்தநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.