
நஷ்டமடைந்து வரும் அரச நிறுவனங்களை புனரமைத்து ஊழியர்களின் உரிமைகளை பாதுகாத்து புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என சமகி ஜன பலவேக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
மேலும், புரட்சிக்கு தயாராகும் நோக்கில் தற்போது கொழும்பு கெம்பல் மைதானத்தில் இடம்பெற்றுவரும் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்தோடு, அதிகாரம் இல்லாவிட்டாலும் எதிர்க்கட்சி என்ற ரீதியில் சகல பொறுப்புக்களையும் நிறைவேற்றுவேன் என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போராட்டங்கள் இன்னும் செல்லுபடியாகும் என்றும் விரைவில் எதிர்க்கட்சியாக அதிகாரம் பெறுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.