
அரச அலுவலகங்களில் எழுதுபொருள் பாவனையை குறைக்கும் தீர்மானம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
மேலும், அரச நிறுவனங்கள் தொடர்பிலான வருடாந்த அறிக்கைகளின் பிரதிகள் அச்சிடப்பட்டு பாராளுமன்றத்திற்கு வழங்கப்படுவது 350 இல் இருந்து 12 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக செயலாளர் தெரிவித்தார்.
இதன்[டி, இதர பிரதிகளை குறுந்தட்டுகளில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சில அறிக்கைகளை மின்னஞ்சல் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்தோடு, அரச அலுவலகங்களில் எழுதுபொருள் பாவனையை குறைக்கும் தீர்மானத்தின் பிரகாரம் சுமார் 10 மில்லியன் ஆவணங்களை சேமிக்க முடிந்துள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே மேலும் தெரிவித்துள்ளார்.