
முதலாம் தரம் மற்றும் உயர்தரத்திற்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பான் விடையங்கள் பாடசாலைகளால் மாத்திரமே தீர்மானிக்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கல்வி அமைச்சின் ஊடாக செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட மாட்டாது எனவும் முதலாம் தரத்திற்கு பிள்ளைகளை சேர்ப்பது குறித்து பாடசாலைகள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, உயர்தரப் பாடப்பிரிவில் தேர்ச்சி பெறாத பாடசாலைகளின் மாணவர்கள் அந்தப் பாடப்பிரிவைக் கொண்ட பாடசாலைகளுக்கான விண்ணப்பப் படிவங்களை அந்தந்த பாடசாலைக்கு அனுப்பி வைக்குமாறும், மேற்படி விண்ணப்பப் படிவங்களை கல்வி அமைச்சுக்கு அனுப்பி வைக்கக் கூடாது என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. .