
நிலவும் குளிர் காலநிலை மற்றும் காற்று மாசுபாடு காரணமாக சில நோய்கள் உருவாகலாம் என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், தற்போதுள்ள நிலைமைகளின் கீழ் தோல் நோய்கள் உருவாகலாம் என லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் தோல் நோய் வைத்திய நிபுணர் டொக்டர் ஸ்ரீஆனி சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்தோடு, சுற்றுச்சூழல் மாற்றத்தின் சமீபத்திய நிலை மற்றும் உங்கள் ஆரோக்கியம் என்ற தொனிப்பொருளில் சுகாதாரப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தக் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
மேலும், தற்போதுள்ள காற்று மாசுபாட்டுடன் கண் நோய்களும் அதிகரிக்கலாம் என தேசிய கண் வைத்தியசாலையின் கண் வைத்திய நிபுணர் டாக்டர் கபில பந்துசேன தெரிவித்துள்ளார்.