
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 06 மாணவர்களும் பேராதனை பொலிஸ் நிலையத்திற்கு வந்து சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட மாணவர்கள் நிட்டம்புவ, சந்தலங்கல, கிரிதலே, மாத்தளை, ஹெனகமுவ மற்றும் கலகம்வத்தை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 23 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 6 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்காக பொலிஸ் விசாரணைகள் முன்னெடுத்து வருகின்றனர்.