தோட்டப் பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகக்குறைந்த அளவிலேயே காணப்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக பெருந்தோட்டத்தில் கல்வி வீழ்ச்சியடையும் அபாயம் காணப்படுவதாக தெரிவித்தார்.