பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்திய 10 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.
மோதலுக்கு காரணமான விடயங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்படஉள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ மேலும் உறுதியளித்துள்ளார்.