
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நேற்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பல வரித் திருத்தங்களுக்கு எதிராக தற்போது அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
இன்று பிற்பகல் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு முன்பாகவும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஷியாம் பனேஹக்க தெரிவித்துள்ளார்.