
கடன் மறுசீரமைப்புக்கு தொடர்ந்தும் ஆதரவளிப்போம் என ஜப்பானிய பிரதிநிதிகள் வலியுறுத்தியதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் இந்த சவாலான சூழ்நிலையில் இதுவரை அமுல்படுத்தப்பட்டுள்ள சீர்திருத்தங்கள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்தி இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்தோடு. ஜப்பானிய தூதரகத்தின் பிரதிநிதிகள் குழுவும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க உட்பட நிதி அமைச்சின் அதிகாரிகள் குழுவும் கலந்துரையாடலில் இணைந்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த மாத இறுதிக்குள் 2 பில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 9 பத்தில் நீடிக்கப்பட்ட நிதி நிவாரணத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பம் இலங்கைக்கு கிடைக்காது என நிதியத்தின் பேச்சாளர் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, இலங்கையின் கடன் மறுசீரமைப்பு செயற்பாட்டில் மேலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்திருந்தன. எவ்வாறாயினும், டிசெம்பர் மாதத்தில் கடன் தொகையை பெற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதியை ஜனவரி மாதம் பெற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது. கூட்டாட்சி பிரேரணையை கொண்டு வருவது பொருளாதார நெருக்கடிக்கான தீர்வுகளை தேடுவதற்கும் தடையாக அமையும் என அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.