
இலங்கையில் கால்நடை வளர்ப்புத் துறையில் தற்போது ஏற்பட்டுள்ள சரிவைக் கருத்தில் கொண்டு கால்நடைத் துறையை மறுசீரமைக்க விசேட குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது கால்நடை தீவன தட்டுப்பாடு காரணமாக நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரித்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
அதன்படி, பால் மற்றும் பால் தொடர்பான பொருட்களை உற்பத்தி செய்யும் இரண்டு முக்கிய நிறுவனங்களான மில்கோ நிறுவனம் மற்றும் தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியம் ஆகியவை ஒரே அமைப்பாக மாற்றவும் இரண்டு நிறுவனங்களும் ஒரு தலைவர் மற்றும் ஒரு இயக்குநர் குழுவின் கீழ் இயங்குவதில் கவனம் செலுத்தபட்டுள்ளது .
மேலும், இரு நிறுவனங்களின் விலங்கு பண்ணைகளை இணைத்து திரவ பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும் என் தெரிவிக்கப்படுகின்றது.